இரட்டை இலை வாடாது..!  பவர் ஸ்டார் பளீச்...

Apr 07, 2024 - 14:30
0 184
இரட்டை இலை வாடாது..!  பவர் ஸ்டார் பளீச்...

லத்திக்கா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட  படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக வீதியில் இறங்கி இரட்டை இலை சின்னத்துக்கு பிரசாரம் மேற்கொண்டார்.

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுனர்கள், சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் என அப்பகுதியில் சென்றவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு சின்னத்துக்கு வாக்களிக்கக் கோரி துண்டு பிரசுரங்களை விநியோகித்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது நடிகர் பவர் ஸ்டாருடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் முன்னறிவு ஏதுமின்றி பிரசாரம் மேற்கொள்வதாக தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார், முறையாக அனுமதி வாங்கிய பின்னர் பிரசாரம் செய்யுமாறு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், மதுரை தன்னோட சொந்த ஊர், அதிமுக வேட்பாளர் சரவணன் தன்னோட உடன்பிறவா சகோதரர் என்பதால் அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்துள்ளேன். இம்முறை உறுதியாக மருத்துவர் சரவணன் வெற்றி பெறுவார், படித்தவர், மருத்துவர், சொந்த ஊர்காரர் என்பதால் நிச்சயமாக வெற்றி பெறுவார். தொடர்ந்து ஏழை மக்களுக்கு நல்லது பண்ணுவார். சரவணன் வெற்றி பெற்றால் கண்டிப்பாக மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர பாடுபடுவாரு என்று கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User