யசோதாவாக மாறிய காயத்ரி யுவராஜ்… குட்டி கிருஷ்ணனோடு க்யூட் போட்டோ ஷூட்

டிவி சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் தனது மகளோடு அழகாக கிருஷ்ண ஜெயந்திக்கு போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Aug 28, 2024 - 13:00
0 631
யசோதாவாக மாறிய காயத்ரி யுவராஜ்… குட்டி கிருஷ்ணனோடு க்யூட் போட்டோ ஷூட்
tv serial actress gayatri yuvaraj celebrating krishna jayanthi festival

சின்னக்கண்ணன் அழைக்கிறான் என தனது அழகு மகளை கிருஷ்ணனாக கொஞ்சி போட்டோ சூட் நடத்தியுள்ளார் சின்னத்திரை நடிகை காயத்ரி யுவராஜ். யசோதாவாக மாறியுள்ளார். குட்டி கண்ணனும் யசோதாவும் க்யூட் ஆக இருக்கின்றனர் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை காயத்ரி இந்த நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி அதை தொடர்ந்து சில சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் சீரியலில் நிலா என்ற கேரக்டரில் அறிமுகமாகி தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

அதை தொடர்ந்து காயத்ரிக்கு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் வந்திருந்தது. அதன்படி தான் இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் கதாநாயகி போன்று பாசிட்டிவான கேரக்டரில் இருந்த முத்தழகு கேரக்டர் பிறகு சரவணன் தன்னை விட்டு விட்டு மீனாட்சியை திருமணம் செய்ததும் நெகட்டிவ் ஆக மாறிவிடும்.

வில்லியாகவே அந்த சீரியலில் நடித்து வந்த காயத்ரியை பலர் திட்டி இருந்தாலும் அதைத்தொடர்ந்து தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து மேடு, மெல்ல திறந்தது கதவு, மீனாட்சி பொண்ணுங்க போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்தார். நடன இயக்குனரான யுவராஜை தான் திருமணம் செய்திருந்தார் காயத்ரி. இந்த ஜோடிக்கு தருண் என்கிற 12 வயதில் மகன் இருக்கிறார்.

பல வருடங்கள் கழித்து கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியான தருணத்தை காயத்ரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் தங்களின் குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழகு பார்த்தனர். புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் டிவி சீரியல் காயத்ரி தனது பெண் குழந்தைக்கு கிருஷ்ணர் வேடமிட்டு அழகு பார்த்துள்ளார். மகளுக்கு மட்டுமல்ல தானும் யசோதாவாக மாறி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காயத்ரி யுவராஜ். இவரது பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User