10 வருட போராட்டம்.. டிவி தொகுப்பாளினி டிடி வாழ்க்கையில் தொடரும் சோகம்.. என்னாச்சு?

முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும் இதன் காரணமாகவே தான் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

Sep 11, 2024 - 11:58
0 530
10 வருட போராட்டம்.. டிவி தொகுப்பாளினி டிடி வாழ்க்கையில் தொடரும் சோகம்.. என்னாச்சு?
tv anchor dd divyadharshini

கடந்த 3 மாதங்கள் எனக்கு சோதனையான காலம். 2 மாதங்களுக்கு முன்பு என் முழங்காலுக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்தேன், ஆம் நான் மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன், இது எனது 4வது அறுவை சிகிச்சை என்று பதிவிட்டுள்ளார் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக கோலோச்சி வருபவர் திவ்யதர்ஷினி. விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்து வருகிறார்.சின்னத்திரை சீரியல்களிலும் டிடி நடித்துள்ளார். 

தனது சமூக வலைத்தள பக்கத்தில் சினிமா நடிகைகளை போல அசத்தலான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தொடர்ந்து புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் திவ்யதர்ஷினி. நீண்ட நேரம் நின்று கொண்டே நிகழ்ச்சி தொகுப்பு செய்த காரணத்தால் முழங்கால் பிரச்சினை ஏற்பட்டது. இதன்காரணமாக பொது நிகழ்ச்சிகளில் கூட கையில் பாதுகாப்புக்காக குச்சியோடு பங்கேற்றிருக்கிறார். கால் வலி பத்தாண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது. இதற்காக பல நேரங்களில் அமர்ந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றது.

முழங்கால் வலிக்காக அவர் முதலில் செய்த ஆபரேசன் தவறாகி விடவே அது மேலும் அதிக வலியை கொடுத்து விட்டது. இதற்காக நிகழ்ச்சி தொகுப்பில் இருந்து நீண்ட நாட்கள் விலகி இருக்க வேண்டியதாயிற்று. அதன் பிறகு மேடைகளில் சில மணி நேரங்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் திவ்ய தர்ஷினி. கடந்த சில மாதங்களாக அதுவும் முடியாமல் போகவே பல மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டியதாயிற்று. அமர்ந்து கொண்டு நிகழ்ச்சி தொகுத்து வழங்க அனுமதிக்க வேண்டும் என்று அவரே கோரிக்கையும் வைத்திருந்தார்.

இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிக நீண்ட பதிவினை புகைப்படத்தோடு எழுதியுள்ளார். "கடந்த 3 மாதங்கள் எனக்கு சோதனையான காலம். 2 மாதங்களுக்கு முன்பு என் முழங்காலுக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்தேன், ஆம் நான் மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன், இது எனது 4வது அறுவை சிகிச்சை எனது வலது முழங்காலில் 10 வருடங்கள் கடந்துவிட்டது என்று கூறியுள்ளார் திவ்யதர்ஷினி.

கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சினிமா, நிகழ்ச்சி தொகுப்பு என அமைதியாக போனாலும் கால் வலி பிரச்சினையால் 10 ஆண்டு காலம் போராடிய டிடி தற்போது 4வது ஆபரேசன் முடிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்களும் அவரது சக நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து கூறி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User