வேட்பு மனுத்தாக்கல் செய்ய இந்த அக்கப்போரா...டிடிவி பாய்ஸ் செய்த அட்ராசிட்டி...

வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் 100க்கும் மேற்பட்டோர் புகுந்ததால் பரபரப்பு.

Mar 27, 2024 - 17:01
0 182
வேட்பு மனுத்தாக்கல் செய்ய இந்த அக்கப்போரா...டிடிவி பாய்ஸ் செய்த அட்ராசிட்டி...

தேனி ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. 

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், வேட்பு மனுத் தாக்கல் செய்ய தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருடன் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோரும் வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் டி.டி.வி. தினகரனுடன் அவரது ஆதரவாளர்களும் கூட்டமாக உள்ளே நுழைய முயன்றதால் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சியர் அலுவலக கேட்டை காவல்துறையினர் பூட்டி வைத்தனர். 

பின்னர் டி.டி.வி.தினகரன் வந்த வாகனத்தை மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் காவல்துறையினர் அனுமதித்தனர். தொடர்ந்து அவர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி என விதி உள்ள நிலையில் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கூட்டமாக ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User