மாணவியை நடுரோட்டில் தாக்கிய விவகாரம்- வாலிபால் பயிற்சியாளர் கைது

மாணவியை தாக்கும் வீடியோ வைரலான நிலையில், பயிற்சியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Oct 28, 2024 - 17:39
0 295
மாணவியை நடுரோட்டில் தாக்கிய விவகாரம்- வாலிபால் பயிற்சியாளர் கைது

ஆசிரியையின் கைகடிகாரத்தை திருடியதாக மாணவியை தாக்கிய விவகாரத்தில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள்  நடந்துள்ளது.

ஓசூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் இதில் பங்கு பெற்றுள்ளனர். அப்போது, ஓசூர் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த நேரத்தில் அந்த தனியார் பள்ளி ஆசிரியரின் கைக்கடிகாரத்தை பள்ளி மாணவி திருடியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த ஆசிரியை அந்த மாணவியையும் அவர்களது பயிற்சியாளரையும் கடுமையாக திட்டி உள்ளார். அதற்கு பயிற்சியாளர் புதிய கைக்கடிகாரத்தை வாங்கி கொடுத்து விடுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் சமாதானம் ஆகாத அந்த ஆசிரியை தொடர்ந்து மாணவியை திட்டியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து பயிற்சியாளர் மாணவியின் தாயாரிடம் கூறி அவர் கூறியபடி மாணவியை தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மைதானத்தில் கீழே கிடந்த கைக்கடிகாரத்தை மாணவி எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவியை தாக்கும் வீடியோ வைரலான நிலையில், பயிற்சியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை செய்ய மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User