”அவர் வக்கிரத்தின் அடையாளம்...” – கொதித்துபோன தமிழிசை!

திருமாவளவன் வக்கிரத்தின் அடையாளம் என தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளது அரசியல்வட்டாரத்தில் சலசலப்பை ஏற்டுத்தியுள்ளது. 

Oct 04, 2024 - 13:23
0 252
”அவர் வக்கிரத்தின் அடையாளம்...” – கொதித்துபோன தமிழிசை!

விசிக மதுப்பு ஒழிப்பு மாநாடு குறித்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்தும் பாண்டிசேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். 

அதாவது, “விஜய் கூறுவது எதையுமே நம்ப முடியவில்லை. கடைசி படம் இதுதான் என்று விஜய் பலமுறை கூறியுள்ளார். விஜய் அரசியல் வருவதற்கு முன்பாக விஜய் நடிக்க உள்ள படம் கடைசி படமா என்று தெரியவில்லை. மாநாட்டை சிறப்பாக நடத்தி விடுவார்கள். ஆனால் கட்சி நடத்துவது எப்படி என்று தான் நாம் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

கடைசி திரைப்படம் கடைசி திரைப்படம் என்று விஜய் கூறி வருகிறார். ஆனால் இன்னும் எத்தனை கடைசி இருக்கிறது என்று தெரியவில்லை. விஜய் போன்று திரை துறையினர் ஏழை எளிய மக்களை ஏமாற்றாதீர்கள். அடிதட்டு மக்களை குறிவைத்து அரசியல் என்ற பெயரில் விஜய் போன்ற திரை துறையினர் ஏமாற்றாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார். 

மேலும், “இளைஞர்கள் வேலைகளை விட்டுவிட்டு மாநாட்டிற்கு வரவேண்டும் என்று புஸி ஆனந்த் கூறுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்று தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், “திருமாவளவன் நாகரீகமான அரசியல்வாதி என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர் எப்பேர்ப்பட்ட மனிதர் என்பதை மது ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசியதன் மூலம் தெரிந்து கொண்டேன். வக்கிரத்தின் அடையாளமாக திருமாவளவன் உள்ளார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

விசிக சார்பில் கடந்த 2 ஆம் தேதி நடத்தப்பட்ட மது ஒழிப்பு மாநாட்டில் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் விசிக தலைவர் தொல். திருமாவளவன். இதனைத் தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும்விதமாக தமிழிசை சௌந்தர்ராஜன் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User