ரயில் நிலையத்தில் கல்வீச்சு... பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு வலைவீச்சு!

ரயில் நிலையத்தில் பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Sep 27, 2024 - 12:05
0 196
ரயில் நிலையத்தில் கல்வீச்சு... பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு வலைவீச்சு!

சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். திருமுல்லைவாயல் ரயில் நிலையத்தில் காத்திருந்த பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணித்த கடற்கரை – அரக்கோணம் ரயிலை நோக்கி கற்களால் தாக்கியுள்ளனர். இதனால் மாநிலக் கல்லூரி மாணவர்களும் பதிலுக்கு கற்களால் தாக்கியுள்ளனர். இதில் இரண்டு மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

RPF காவலர்கள், தாக்குதல் நடத்திய மாணவர்களை துரத்திய போது அனைவரும் கலைந்து ஓடிவிட்ட நிலையில், எதிர்தாக்குதல் நடத்திய மாநிலக் கல்லூரி மாணவர்கள் 4 நபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் அன்னனூர் ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User