பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 

புதுடெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sep 27, 2024 - 11:54
0 244
பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 
stalin meets modi

புதுடெல்லிக்கு இரண்டு நாள்கள் அரசு முறைப் பயணமாக நேற்றிரவு விமானத்தில் சென்ற முதல்வரை திமுக எம்.பிக்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காவல் படையினர் மரியாதை செலுத்தினர்.

புது டெல்லியின் சவுத் ப்ளாக்கில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். தமிழகத்துக்கு சமக்ரா சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும், சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டப் பணிகளுக்கான நிதியை உடனே வழங்க வேண்டும், இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். 

பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் மறைந்த சீதாரம் யெச்சூரியின் இல்லத்துக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் ஆறுதல் தெரிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு இன்று மாலை 5.30 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்குத் திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User