வங்கி வாசலில் பட்டப் பகலில் பணம் பறித்த கொள்ளையர்கள்! கதறி அழுத விவசாயி...

கள்ளக்குறிச்சியில் பட்டப் பகலில் வங்கி வாசலில் வைத்து விவசாயியிடமிருந்து மர்ம நபர்கள் பணத்தைப் பறித்துச் சென்ற விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Mar 15, 2024 - 20:45
0 159
வங்கி வாசலில் பட்டப் பகலில் பணம் பறித்த கொள்ளையர்கள்! கதறி அழுத விவசாயி...

கள்ளக்குறிச்சியில் பட்டப் பகலில் வங்கி வாசலில் வைத்து விவசாயியிடமிருந்து மர்ம நபர்கள் பணத்தைப் பறித்துச் சென்ற விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, அம்பலம் கிராமத்தைச் சேர்ந்த முருகப்பிள்ளை என்ற விவசாயி, நெல் விற்றதில் கிடைத்த காசோலையை வங்கியில் செலுத்தி பணம் பெறுவதற்காக கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கிக்கு வந்துள்ளார். அங்கு பணம் பெற்ற பின்னர் தமது மகனுடன் வங்கியை விட்டு அவர் வெளியே வந்தபோது, அவரிடம் பணம் இருந்ததை நோட்டம் விட்ட மர்ம நபர்கள், வங்கியின் வாசலில் வைத்து கையில் இருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த முருகப்பிள்ளை மற்றும் அவரது மகன் இதுகுறித்து, காவல்துறையில் புகார் அளித்தனர். கள்ளக்குறிச்சி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் வங்கி அலுவலகம் முன்பே கொள்ளையர்கள் பணத்தைப் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தந்தையும் மகனும் அங்கேயே கதறி அழுத சம்பவம் பார்ப்பவரைக் கண்கலங்க செய்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User