சென்னைவாசிகளே உஷார்..3 நாளுக்கு தண்ணீர் வராது-குடிநீர் வாரியம் தந்த அப்டேட்

திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூா், நந்தனம், அபிராமபுரம், மந்தைவெளி ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

Sep 23, 2024 - 10:05
0 239
சென்னைவாசிகளே உஷார்..3 நாளுக்கு தண்ணீர் வராது-குடிநீர் வாரியம் தந்த அப்டேட்
சென்னையில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய மண்டலங்களில் செப்.24 முதல் 26-ம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகள் நாளை (செப்.24) காலை 9 மணி முதல் செப்.26-ம் தேதி காலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 
இந்தப் பணிகள் நடைபெறும் நேரங்களில் தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூா், நந்தனம், அபிராமபுரம், மந்தைவெளி ஆகிய பகுதிகளிலும், அடையாறு மண்டலத்துக்குட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்திலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அவசரத் தேவைகளுக்கு இணையதளம் மூலம் குடிநீர் லாரிகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும். குடிநீர் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற தொலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. ஆகையால் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் தேவைக்குக் குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User