Andhagan:“சப்ஜெக்ட்டுக்கு இன்னும் உயிர் இருக்கு..” பிரசாந்தின் அந்தகன் டீசர் ரிலீஸ்... செம ஸ்கெட்ச்!

டாப் ஸ்டார் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பல தடைகளை கடந்து டீசர் வெளியாகியுள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Jul 13, 2024 - 12:53
0 413
Andhagan:“சப்ஜெக்ட்டுக்கு இன்னும் உயிர் இருக்கு..” பிரசாந்தின் அந்தகன் டீசர் ரிலீஸ்... செம ஸ்கெட்ச்!
Andhagan Teaser

சென்னை: 1990களில் சாக்லெட் ஹீரோவாக கோலிவுட்டை கலக்கியவர் டாப் ஸ்டார் பிரசாந்த். இயக்குநரும் நடிகருமான தியாகராஜனின் மகனாக சினிமாவில் அறிமுகமானாலும், ஆக்டிங், டான்ஸ், ஆக்ஷன், ஜிம்னாஸ்டிக் என சகல வித்தைகளும் கற்றுத் தேர்ந்த ஹீரோ மெட்டீரியலாக வலம் வந்தார். விஜய், அஜித்துக்கு முன்பே தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய பிரசாந்த், ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகளே இல்லாமல் வீட்டில் முடங்கியிருந்தார். கடைசியாக 2019ம் ஆண்டு தெலுங்கில் வெளியான விநய விதேய ராம என்ற படத்தில் நடித்திருந்தார்.

அதேநேரம் அவரது தந்தை தியாகராஜன் இயக்கும் அந்தகன் படத்திலும் நடித்து வந்தார். இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்காக அந்தகன் உருவானது. முதலில் இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கவிருந்தார். பின்னர் அவர் விலகியதும் ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா ரீமேக் செய்வதாக இருந்தது. ஆனால் அவரும் அந்தகனை கைவிட, இந்தப் படத்தில் பிரசாந்தை ஹீரோவாக்கினார் தியாகராஜன். பிரசாந்துடன் நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி, யோகி பாபு ஆகியோரும் நடித்தனர், சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.

தொடங்கிய வேகத்தில் அடுத்தடுத்து பல தடைகளை சந்தித்த அந்தகன், ஒருகட்டத்தில் ட்ராப் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பை முடித்துவிட்ட தியாகராஜன், அந்தகனை ரிலீஸ் செய்ய முடியாமல் தடுமாறினார். இதோ, அதோ என ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என சொல்லிவிட்டு, அதன்பின்னர் எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தான் விஜய்யின் தி கோட் படத்தில் கமிட்டானார் பிரசாந்த். வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் தி கோட் படத்தில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான ‘விசில் போடு’ பாடலில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா மூவரும் சேர்ந்து டான்ஸில் பட்டையை கிளப்பினர். இப்போதும் அதே எனர்ஜியுடன் டான்ஸ் ஆடும் பிரசாந்துக்கு ரசிகர்கள் ஃபயர் விட்டனர். விஜய்க்காக தி கோட் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும், பிரசாந்தின் கேரக்டர் என்ன, அவரது நடிப்பு எப்படி இருக்கும் என்பதும் செம ஹைப் கொடுத்துள்ளது. இந்நிலையில், தி கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. 

இதனால் அதற்கு முன்பாக அந்தகன் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டார் தியாகராஜன். அதன்படி இந்தப் படம் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அந்தகன் டீசரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. பிரசாந்த் பார்வையற்ற பியானோ இசைக் கலைஞராக நடித்துள்ள அந்தகன், அவருக்கு கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து விலகி விடும் அந்தகன், இந்தமுறை கண்டிப்பாக வெளியாகும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். விஜய்யின் தி கோட் படத்தில் பிரசாந்த் நடித்து வருவதால், அந்தகன் வெளியாக இதுதான் சரியான நேரம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது வெளியான அந்தகன் டீசர், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User