அமேசான் பிரைமில் வெளியாகும் டாப் திரைப்படங்கள்.... ஓடிடி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

தியேட்டர்களில் ஒரு கலக்கு கலக்கிய இரண்டு முக்கிய மற்றும் பிரமாண்ட திரைப்படங்களான கல்கி 2898 AD மற்றும் ராயன், பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

Aug 22, 2024 - 15:14
0 1
அமேசான் பிரைமில் வெளியாகும் டாப் திரைப்படங்கள்.... ஓடிடி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்!
அமேசான் பிரைமில் வெளியாகும் டாப் திரைப்படங்கள்

நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் கல்கி. இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஜூன் மாதம் வெளியானது. பிரபாஸுடன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.   

முதல் நாளில் 190 கோடி ரூபாய் வரை வசூலித்த கல்கி, அடுத்தடுத்த நாட்களிலும் கலெக்ஷனில் மாஸ் காட்டியது. இதனால் முதல் 5 நாட்களிலேயே 500 கோடியை கடந்து சாதனை படைத்தது. பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த சாஹோ, ராதேஷ்யாம், ஆதிபுருஷ் படங்கள் தோல்வியடைந்தன. கல்கிக்கு முன்பு வெளியான சலார் மட்டுமே, பிரபாஸுக்கு கம்பேக் கொடுத்தது. இதன் தொடர்ச்சியாக கல்கி திரைப்படத்தில் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் கொடுத்து கம்பேக் கொடுத்துள்ளார் பிரபாஸ். இந்நிலையில் இப்படம் இன்று (ஆகஸ்ட் 22) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இந்தி வெர்ஷன் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 20ம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தனுஷ் இயக்கி, நடித்த ‘ராயன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இது தனுஷின் 50வது படம் என்பது கூடுதல் சிறப்பாகும். இந்த படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களிலேயே அதிகளவு வசூல் செய்து பாக்ஸ் ஆஃபீசை நொறுக்கியப் படமாக ‘ராயன்’ பார்க்கப்படுகிறது. படம் வெளியான ஒரு வாரத்திலேயே ரூ. 116 கோடி வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. உலகளவில் இதுவரை ரூ. 150 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் வெளியான தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த பெருமையை ‘ராயன்’ திரைப்படம்(Raayan Movie) பெற்றிருக்கிறது. 

மேலும் படிக்க: “வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும்” - மாரிசெல்வராஜை வாழ்த்திய பிரபலங்கள்

இந்நிலையில் கல்கி திரைப்படத்தை தொடர்ந்து ராயன் திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 23) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  தியேட்டர்களில் கலக்கிய ‘ராயன்’ படத்தை ஓடிடி-யில் கண்டு ரசிக்க ரசிகர்களே தயாராக இருங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User