Coolie: கூலி சம்பவம் லோடிங்... முதல் நாள் படப்பிடிப்பில் சர்ப்ரைஸ்... ரஜினியுடன் வாரிசு நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி பட ஷூட்டிங், இன்று ஐதராபாத்தில் தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

Jul 05, 2024 - 17:05
0 325
Coolie: கூலி சம்பவம் லோடிங்... முதல் நாள் படப்பிடிப்பில் சர்ப்ரைஸ்... ரஜினியுடன் வாரிசு நடிகை!

சென்னை: லியோவை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஜெயிலர் படத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த ரஜினிக்காக மீண்டும் ஒரு படம் தயாரிக்க முடிவு செய்தது சன் பிக்சர்ஸ். இப்படியாக ரஜினி, லோகேஷ் கனகராஜ், சன் பிக்சர்ஸ் காம்போவில் தலைவர் 171 திரைப்படம் உருவாவது கன்ஃபார்ம் ஆனது. அதோடு இப்படத்தின் டைட்டில் கூலி என அறிவித்த படக்குழு, அதற்கான டீசரையும் வெளியிட்டு மாஸ் காட்டியது. அப்போது முதலே ரசிகர்களிடம் கூலி படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. 

ரஜினி, லோகேஷ் இருவருடனும் ராக் ஸ்டார் அனிருத், கேமரா மேன் க்ரிஷ் கங்காதரன், அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆகியோரும் கூலியில் இணைந்துவிட்டனர். ஆனால், ரஜினியுடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்று ஐதராபாத்தில் கூலி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் லோகேஷ் கனகராஜ். இதற்காக நேற்று ஐதராபாத் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினியை, டோலிவுட் முன்னணி நடிகர் மோகன்பாபு வரவேற்றார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கூலி படத்தின் ஷூட்டிங் இன்று ஐதராபாத்தில் தொடங்கியதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காட்சிகள் மட்டுமே படமாக்கப்படலாம் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், ரஜினியுடன் ஸ்ருதி ஹாசனும் நடித்து வருவது தற்போது உறுதியாகியுள்ளது. கூலி படத்தில் ஸ்ருதி நடிப்பது குறித்து படக்குழு எதுவும் அறிவிக்காத நிலையில், அவர் தனது இன்ஸ்டாவில் வைத்திருந்த ஸ்டோரி வைரலானது. அதில், ’Day 1, #Coolie’ என்ற கேப்ஷனுடன் தனது போட்டோவையும் ஷேர் செய்திருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த தகவல் வேகமாக வைரலானதையடுத்து அந்த ஸ்டோரியை ஸ்ருதி ஹாசன் டெலிட் செய்துள்ளார். 

இதனால், லோகேஷ் கனகராஜ்ஜின் பெர்மிஷன் இல்லாமல் ஸ்ருதி ஹாசன் ஸ்டோரி வைத்துவிட்டாரா என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். எப்போதுமே ஷூட்டிங் தொடங்கும் முன்பே தனது படத்தின் ரிலீஸ் தேதி, ஸ்டார் காஸ்டிங் பற்றி அறிவிப்பது லோகேஷின் வழக்கம். ஆனால், கூலி படப்பிடிப்பு இன்று தொடங்கியது என்ற அப்டேட்டை தவிர வேறு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் ரஜினியுடன் ஸ்ருதி ஹாசன் நடிப்பது உறுதியானது போல, சத்யராஜ்ஜும் இப்படத்தில் கமிட்டாகியுள்ளது உண்மை தான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User