ஒரே நாளில் சவரனுக்கு ₹1,680 சரிவு... நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்!

சென்னையில் இன்று சவரனுக்கு 1,680 விலை குறைந்துள்ளது.

Jun 24, 2026 - 04:53
Updated: 1 month ago
0 214
ஒரே நாளில் சவரனுக்கு ₹1,680 சரிவு... நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்!
gold and silver prices fall sharply today

கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் அதிரடி வீழ்ச்சியைக் கண்டுள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தங்கம் விலை சரிவு

நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,08,480-க்கும், ஒரு கிராம் ரூ.13,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ₹1,680 என அதிரடியாகக் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,06,800 என்ற நிலைக்கு வந்துள்ளது. அதேபோல், கிராமுக்கு ₹210 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,350-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையும் கணிசமாகக் குறைவு

தங்கத்தின் விலையைப் பின்பற்றி வெள்ளி விலையும் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.240-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 வரை சரிந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருவது நடுத்தர மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User