தங்கம் வாங்குவோருக்கு முக்கிய தகவல்... இன்று விலை என்ன?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.1,09,600-க்கும், கிராம் ரூ.13,700-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை.

Jul 04, 2026 - 05:21
0 302
தங்கம் வாங்குவோருக்கு முக்கிய தகவல்... இன்று விலை என்ன?

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒரே நாளில் இரு முறை மாற்றம் கண்டது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை காலை,மாலை என ஒரே நாளில் இருமுறை சவரனுக்கு ரூ 2400 உயர்ந்து ரூ 1,08,400க்கும் விற்பனையானது.

அதன் தொடர்ச்சியாக நேற்று தங்கத்தின் விலை உயர்ந்து கிராமுக்கு ரூ 150 ம்,சவரனுக்கு ரூ 1,09,600க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சென்னையில் 22கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ 13,700க்கும் ஒரு சவரன் ரூ 1,09,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை போலவே வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ 260க்கும் ஒரு கிலோ ரூ 2 லட்சத்து 60 ஆயிரத்து விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User