இன்று வெளுத்து வாங்கும் மழை... 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று கோவை நீலகிரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Jul 04, 2026 - 04:41
0 566
இன்று வெளுத்து வாங்கும் மழை... 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் காரணமாக இன்று பலத்த மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்த விரிவான வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நேற்று நிலவரப்படி வடமேற்கு வங்ககடலோர பகுதி அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மேலும் வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைவதன் காரணமாக கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வடமாவட்டங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இதர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 1

Comments (0)

User