சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்.....

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்து முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதில் உரையாற்றிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்திருந்தார்.

Jun 18, 2026 - 11:12
0 217
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்.....
first assembly session governor arlekar key announcements

இதில் உலகத்தரத்திலான பயிற்சிகளை அளிக்க ஒலிம்பிக் மையங்கள் அமைக்கபடும்.சமீப காலமாகவே பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருவதால் அதனை தடுக்க இரும்புக்கரம் கொண்டு அதனையெல்லாம் ஒடுக்கப்படும். மேலும் ஒன்றிய அரசு மும்மொழிக் கொள்கையான தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க நினைப்பதால் அதனை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் இரு மொழிக் கொள்கையை தான் தமிழக வெற்றி கழகம் அரசு பின்பற்றும் என்றும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் மிக விரைவில் இந்த தமிழக வெற்றி கழகம் அரசு சமூக  நீதி சர்வே என்ற பெயரில் நிகழ்த்தும் என்று தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரைப் பெறுவதில் பல்வேறான சிக்கல் நீடிக்கின்றது.கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை கட்டியே தீர்வோம் என்று சாவல் விட்டிருக்கும் நிலையில் அது விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் அதனை தடுக்க மிக விரைவில் நடிவடிக்கை மேற்கொள்ளும். அதனைத் தொடர்ந்து கேரள அரசு புதிதாக அணை கட்ட முயற்சிப்பதை தடுக்கும் வகையில் முல்லை பெரியாறு அணையை பழுதுபார்க்கும் பணிகளை விரைவில் மேற்கொள்ளப்படும்.

மேலும் கீழடி ஆதிச்சநல்லூர், கொடுமணல், அரிக்கமேடு, சலுவன் குப்பம் மற்றும் பூம்புகார்  ஆகிய தளங்களில்  தொடர்ந்து தொல்லியல் துறை ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய இரு தளங்களை யுனெஸ்கோவின்  உலகப் பாரம்பரிய சின்னம்  என்ற அங்கீகாரம் கிடைக்கவும் பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லவும் அதற்கான நடிவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார்.

இறுதியாக வறுமை இல்லாத தமிழ்நாட்டை, உருவாக்குவதே இந்த அரசின் முக்கிய குறிக்கோளாகவும் இருக்கும்.உரையின் முடிவில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க அனைவருக்குமான அரசாக மக்களுக்கான அரசாக இந்த அரசு நேர்மையுடனும் வெறுப்பு விருப்புமின்றி செயல்படும் என்று உரையாற்றினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User