சட்டபேரவையில் வினாவிடை கிடையாது ...சபாநாயகர் அதிரடி அறிவிப்பு…

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்து முதல் சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. சட்டபேரவையில் எதிர்கட்சிகள் மற்றும் யாருக்கும் இந்த மூன்று நாட்களுக்கு  வினா விடை நேரம் என்பது கிடையாது என்று சபாநாயகர் ஜே.டி. பிரபாகர்  தெரிவித்துள்ளார்.

Jun 18, 2026 - 11:04
0 244
சட்டபேரவையில் வினாவிடை கிடையாது ...சபாநாயகர் அதிரடி அறிவிப்பு…
assembly session no question hour

சட்டபேரவை கூட்டத்தொடர்  நடைபெற்றிருக்கும் பொழுது இடையில் ஒரு மணிநேரம் வினா விடை நேரம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.இதில் எதிர்கட்சியினர் கேள்வி கேட்க சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதிலளிப்பது தான் வழக்கமான செயல். ஆனால் இந்த நடைமுறையை தற்போது தவெக அரசு மாற்றியுள்ளது. ஏனென்றால் புதிய அமைச்சர்களாக இருப்பதால் இந்த முடிவு என்று  விளக்கம் அளித்துள்ளார்.

இது எதிர்க்கட்சிகள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்து சில நாட்களிலேயே பல குற்றச்சாட்டுகளும் வன்முறைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.இதனைப் பற்றி எந்தவொரு கேள்வியும் எழுப்பி விடக் கூடாது என்பதாற்காகவே இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது இது எதிர்கட்சிகள் மற்றும்  பிற கட்சியினர் மத்தியில்  மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆட்சியில் சட்டஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும் மற்றும் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிட்டது என்பது எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு. சமீபத்தில் ஒரு சம்பவம் அனைவரும் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்தது.மேலும் விவசாயிகளின் பயிர்க்காப்பீடு  திட்டத்தில் தவெக சொன்னதை முழுமையாக செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது  என்றும் குற்றச்சாட்டுகின்றனர்.

இதற்கிடையில் நிதியமைச்சகத்தில் வெள்ளை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது ஆனால் இதில் கடந்த திமுக அரசு பல்வேறு கடன்களை வாங்கிவிட்டு சென்றுள்ளது என்று  அது வெற்று அறிக்கையை தான் வெளியிட்டார்கள் என்று திமுகவினர் குற்றச்சாட்டுகின்றனர்.

இதனைப் பற்றி எல்லாம் கேள்வி கேட்க தயாராக இருக்கும் திமுகவினர் மற்றும் பிற கட்சியினர் சபாநாயகரின் இந்த அதிரடி முடிவு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு குற்றச்சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும் தமிழக முதலமைச்சர் விஜய் எதற்கும் வாய் திறக்காமல் மௌனமாக இருந்து வருகிறார்.அதை போல் சட்டபேரவை கூட்டத்தை நிறைவு செய்து விடலாம் என்று நினைத்துக் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளார்கள் என்று குற்றச்சாட்டும் வைக்கின்றனர்.

மேலும் சபாநாயகர்  புதிய அமைச்சர்கள் என்று வெற்று காரணத்தை கூறி தப்பித்து கொண்டு இருக்கின்றார். யாரும்  கேள்வி கூடாது என்றால் இந்த ஆட்சியை யார் தான் கேள்வி கேட்பார்கள் என்று அரசியல் கட்சியினர் அனைவரும் இந்த ’முடிவுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User