ஊழல் 10/10... திமுகவுக்கு இருக்கு வேட்டு..! சட்டமன்றத்திற்கு தயாராகும் தவெக..!

**மிகச் சுருக்கமாக:** சட்டமன்றத்தில் திமுகவின் தாக்குதலுக்கு பதிலளிக்க தவெக தரப்பு தயாராகி வருகிறது. அதேவேளை, கடந்த திமுக ஆட்சியின் ஊழல் விவரங்களும் தொகுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jun 17, 2026 - 03:30
0 199
ஊழல் 10/10... திமுகவுக்கு இருக்கு வேட்டு..! சட்டமன்றத்திற்கு தயாராகும் தவெக..!

'வரும் ஜூன் 18ம் தேதி கூடும் சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழகத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு சம்பவங்கனை முன்வைத்து, தவெக ஆட்சியை திமுக கடுமையாக சாடும் என்பதை முதல்வர் விஜய் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார். அதற்கு பதிலடி கொடுக்க அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி தலைமையிலான டீம் தயாராகிவருகிறது. குறிப்பாக, இப்போதும் டாஸ்மாக் உள்ளிட்ட சில துறைகளிலிருந்து சில ஆதாயங்கள் சித்தரஞ்சன் சாலையை நோக்கிச் செல்வதை ஜான் கண்டுபிடித்துள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை களையெடுக்கும் அதேசமயம், கடந்த தி.மு.க ஆட்சியில் நடை பெற்ற ஊழல்கள் குறித்தும் துறைவாரியாக புள்ளி விவரங்கள் எடுக்கப்படுகின்றன.

அந்த அடிப்படையில் செந்தில்பாலாஜி வசமிருந்த மின்சாரத் துறையில் டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதலில் நடைபெற்ற ரூ.397 கோடி ஊழல் விவகாரத்தை சட்டசபையில் பேசி திமுகவை அட்டாக் செய்வார் விஜய். நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல்களுடன் பணி நியமனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் கே.என்.நேரு சுருட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்தும் பேசி திமுகவினர் வாயை அடைக்க தவெக அமைச்சர்கள் தயாராகி வருகிறார்கள்.

உணவுத்துறையில் சக்கரபாணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் கொடுத்துள்ள ஊழல் புகார், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய் கருட்டியது. டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட் என பல ஆயிரம் கோடிகள் வசூலித்தது குறித்தும் சூட்டைக் கிளப்ப தயாராகிவிட்டார்கள் தவெக சர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்துத் துறையில் பேருந்து கொள்முதலில் நடைபெற்ற ஊழல், ஆர்.டி.ஓ. உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு கோடிக்கணக்கில் வசூலிக்கப்பட்ட லஞ்சம் ஆகியவை குறித்தும் சூடாகவே பேச தயாராகி வருகிறார்கள் த.வெ.. அமைச்சர்கள்.

சேகர்பாபு வசமிருந்த சி.எம்.டி.ஏ.வில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்குவதில் நடந்த பரிமாற்றங்கள், துரைமுருகன் வசமிருந்த கனிமவளத் துறையில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி மணல் கொள்ளையில் ஈடுபட்டது. உரிமம் இல்லாமல் செயல்பட்ட குவாரிகளில் ரூ700 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்திருப்பது ஆகியவை எல்லாம் இந்த கூட்டத் தொடரில் அனல் வீசக் காத்திருக்கின்றன.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வசமிருந்த உழவர் நலத்துறையில் தார்பாய் கொள்முதலில் நடைபெற்ற ஊழல், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையில் தரமற்ற மின்சாதனங்கள் வாங்கியதில் ஊழல், அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வு ஆகியவற்றில் லஞ்சம் வாங்கியது என மூர்த்தி மீதான குற்றச்சாட்டுகளையும் சட்டசபையில் முன்வைத்து தகளி ஆட தயாராகிவிட்டார்கள் தவெக அமைச்சர்கள் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

இந்த நிலையில், உப்பு தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும் என்பதால், திமுக இதற்கு எப்படி பதில் தரத் தயாராகப் போகிறது என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User