ஒருமுறையாவது செல்ல வேண்டிய இயற்கை சொர்க்கம் – கூர்க்!

கர்நாடகாவின் கூர்க், காபி தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், வனவிலங்கு சரணாலயங்கள், ஆன்மிகத் தலங்கள் மற்றும் சாகச அனுபவங்கள் நிறைந்த அழகிய சுற்றுலா தலமாகும். இயற்கை, ஆன்மிகம், சுவையான உணவு, ஷாப்பிங் என அனைத்தையும் ஒரே பயணத்தில் அனுபவிக்கக்கூடிய இடம் இது.

Jun 29, 2026 - 13:30
Updated: 28 days ago
0 181
ஒருமுறையாவது செல்ல வேண்டிய இயற்கை சொர்க்கம் – கூர்க்!

மடிகேரி என்றும் அழைக்கப்படும் கூர்க், கர்நாடக மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படும் அளவுக்கு இயற்கை அற்புதங்கள் நிறைந்த இடமாக இது விளங்குகிறது. பசுமையான காபி தோட்டங்களும் மூடுபனி சூழ்ந்த மலைகளும் இதன் சிறப்பு. இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.

இங்கு காண வேண்டிய இடங்களில் அபே நீர்வீழ்ச்சி நிச்சயம் இடம்பெறும். அடர்ந்த காபி மற்றும் மசாலா தோட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, பார்வைக்கு மிகவும் அழகாக இருக்கும். மடிகேரியிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருவி, மழைக்காலத்தில் அதிக நிரோட்டத்துடன் காட்சியளிக்கும்.

ராஜாவின் இருக்கை (Raja's Seat) என்பது மடிகேரியில் அமைந்துள்ள ஓர் அழகிய பூங்கா. இந்த இடம் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கவும், மலைத்தொடர்கள் மற்றும் பள்ளத்தாக்குகளைக் காணவும் மிகச் சிறந்த இடமாகும். கூர்க் மன்னர்கள் இங்கிருந்து சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்ததாக கூறப்படுகிறது. எனவே, மாலை நேரத்தில் இங்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். ஓம்காரேஸ்வரர் கோயில், மடிகேரியில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இதன் கட்டடக்கலை இஸ்லாமிய மற்றும் கோதிக் பாணிகளின் தனித்துவமான கலவையாக விளங்குகிறது.

குஷால்நகர், கூர்க் பயணத் தின் முக்கிய நுழைவாயிலாகச் கருதப்படுகிறது. டுபாரே யானைகள் முகாம் இதன் அருகிலேயே அமைந்துள் ளது. காவேரி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த முகாம், யானைகள் பராமரிக்கப்படும் முக்கிய இடமாகும். இங்கு, யானைகளுக்கு உணவளிப்பது, குளிப்பாட்டுவது போன்ற செயல்களில் பொதுமக்களும் ஈடுபடலாம். குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடம் மேலும், இங்கு ரிவர் ராஃப்டிங்போன்றசாகசவிளையாட்டுகளிலும் ஈடுபடலாம்.
பைலகுப்பே என்ற இடம் கூர்கிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய திபெத்திய குடியேற்றங்களில் ஒன்று என்று சொல்லலாம்.

கோல்டன் கோயில்' அல்லது 'நாம்ட்ரோலிங் மடாலயம்' என்றழைக்கப்படும் திபெத்திய மடாலயம், பெரிய புத்தர் சிலைகளும் மனதை அமைதிப்படுத்தும் அமைதியான சூழலுக்கும் பெயர் பெற்றது. மடாலயத்தின் முக்கிய மண்டபத்தில் கௌதம புத்தர், பத்மசம்பவர், அமிதயாஸ் ஆகியோரின் பிரமாண்டமான தங்க நிற சிலைகள் உள்ளன.

இது ஆன்மிக மையம் மட்டுமல்ல. நியிங்மா மரபைச் சேர்ந்த ஒரு முக்கிய கல்வி மையமும் கூட இங்கு சுமார் 5,000 துறவிகள் வசித்து, புத்த மதம், தத்துவம் மற்றும் தியானம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். மடிகேரியின் அருகில் அமைந்துள்ள தலக்காவேரி, காவிரி நதியின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இது பிரம்மகிரி குன்றுகளின் உச்சிப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வருபவர்கள் சுற்றியுள்ள மலைகளின் அழகிய காட்சியைக் காணலாம்

பாகமண்டலா என்பது தலக்காவேரியிலி ருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது காவிரி, கன்னிகே மற்றும் சுஜ்யோதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் புனிதத் தலமாகும். இவற்றில் சுஜ்யோதி நதி நிலத்தடியில் ஓடுவதாக நம்பப்படுகிறது. இங்கு புகழ்பெற்ற பகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது கேரள கட்டடக்கலை மற்றும் தென்னிந்திய கோயில் வடிவமைப்பின் கலவையாக விளங்குகிறது. காசி, சுயா போலவே இங்கும் முன்னோர்களுக்கான தர்ப் பணம் நடைபெறுகிறது.

தலைக்காவேரியும், பாக மண்டலாவும் இங்குள்ள முக்கிய ஆன்மிகத் தலங்களாகும். ஒவ்வோர் ஆண்டும் அக்டோ பர் மாதத்தில் வரும் துலா சங்கராந்தி நாளில் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த இரு இடங்களுக்கும் வருகை தருகிறார்கள். நூல மண்டல்பட்டி என்பது கூர்க்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடைசி சில கிலோமீட்டர்கள் கரடு முரடான மலைப்பாதையாக இருப்பதால், இடத்துக்கு ஜீப்பில் செல்வது சிறந்தது. இங்கு பசுமையான மலைகளின் பரந்த காட்சியைப் பார்த்து ரசிக்கலாம் குறிப்பாக மேகக் கூட்டங்களைக் கண்டு ரசிப்பதற்கு ஏற்ற இடம் இது அரபிகா மற்றும் அடர்ந்த காடுகளுக்குள் இருக்கும் இருப்பு நீர்வீழ்ச்சி, கூர்க்கிலிருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மழைக்காலத்தில் இது மிகவும் அழகாக இருக்கும்.

கூர்க்கிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாகர் ஹோலே தேசியப் பூங்கா. அது பலவித வனவிலங்குகளின் இருப்பிடமாக உள்ளது. கம்பீரமான யானைகள் முதல் அரிதாகக் காணப்படும் சிறுத்தைகள் வரை, இங்கு  பார்க்கலாம். மேலும் புலிகள், இந்தியக் காட்டெருமைகள், காட்டு நாய்கள் போன்றவற்றை இங்கு காண முடியும். சஃபாரி வசதி உள்ளது. கூர்க்கின் பிரபலமான உணவுகளில் ஒன்று அரிசி மாவால் செய்யப்படும் கடும் புட்டு உருண்டைகள். நூல்புட்டு என்பது இடியாப்பம் போன்ற உணவு அரிசி மாவினால் செய்யப்படும் சப்பாத்தி போன்ற உணவு 'அக்கி ஒட்டி அசைவ உணவுக்காரர்கள் பன்றிக்கறியை சிறப்பு மசாலாக்களுடன் சமைக்கும் பண்டி கறி என்ற உணவுவகையை உண்ணலாம். இது கூர்க்கின் அடையாள உணவு.

இந்தியாவின் முக்கிய காபி உற்பத்தி பகுதிகளில் ஒன்று கூர்க் இங்கு அரபிகா மற்றும் ரோபெஸ்டா வகை காபிகள் மிகப் பிரபலம் இங்கு வருபவர்கள் கருப்பு மிளகு, ஏலக்காய், ஜாதிக்காய், லவங்கப்பட்டை, கிராம்பு போன்ற மசாலா பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இவை ஒவ்வொன்றும் நறுமணத்திற்கு புகழ் பெற்றவை. கூர்க்கில் காட்டுத் தேன் மிகப் பிரபலம், தரமான கடைகளில் இதை வாங்குவது நல்லது. மடிகேரி சந்தை, குஷால் நகர் சந்தை வெள்ளிக்கிழமை சந்தை, பைலக்குப்பே திபேத்திய சந்தை போன்றவை ஷாப்பிங் செய்வதற்கு உகந்த இடங்கள். வாழ்வில் ஒருமுறையேனும் செல்லவேண்டிய சுற்றுலாத்தலம் என்றால் அது கூர்க் என்று சொல்லலாம்.

போவோம் ஊர்கோலம்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User