காய்கறி வியாபாரி மகன் டூ தமிழ்நாட்டின் அர்னால்ட்… யார் இந்த ஆணழகன்..? 

காய்கறி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியின் மகன் ஆணழகனாக உருவெடுத்து சாதனை படைத்திருப்பது பொள்ளாச்சி மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது . 

Jun 30, 2026 - 09:47
0 141
காய்கறி வியாபாரி மகன் டூ தமிழ்நாட்டின் அர்னால்ட்… யார் இந்த ஆணழகன்..? 

பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி செல்லமுத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் உமர் பாரூக் காந்தி. வார சந்தையில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு சுலைமான் என்ற மகன் உள்ளார். சுலைமானை பொறுத்தவரை அவர் வளர வளர காது மற்றும் வாய் பேச முடியாத திறன் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

சுலைமானிற்கு 15 வயது இருக்கும் பொழுது பொள்ளாச்சியில் உள்ள ஒரு தியேட்டரில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடித்த திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார் அவரது தந்தை உமர் பாரூக். அப்போது படத்தைப் பார்த்த சுலைமான் தானும் அர்னால்டு போலவே வர வேண்டுமென தனது தந்தையிடம் கூறி உடற்பயிற்சி கூடத்தில் சேர்த்து விடுமாறு கூறியுள்ளார். மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் உடற்பயிற்சி கூடத்தில் சேர்த்து விட்டுள்ளார் உமர். 

அப்போது வைசாக் என்பவர் சுலைமானுடன் சேர்ந்து இருவரும் பயிற்சி பெற்று வந்துள்ளனர். சுலைமானின் அசாத்திய திறமைகளை கண்ட வைசாக் கோவையில் உள்ள உடற்பயிற்சி நிபுணர் சந்தோஷ் என்பவரிடம் அழைத்து சென்று சுலைமானிடம் இருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை அடுத்து சுலைமான் சிறந்த கட்டுக்கோப்பான உடலைப்பு பெரும்பகையில் மிகச் சிறந்த பயிற்சி அளித்து கட்டுக்கோப்பான உடலமைப்பை பெரும் வகையில் உருவாக்கினர். 

அதைத்தொடர்ந்து பல்வேறு ஆணழகன் போட்டிகளில் பங்கேற்ற சுலைமான் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் எண்ணற்ற பரிசுகளை வென்று சாதித்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு பெற்று சாதித்தார் சுலைமான், தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில்  பங்கேற்று வென்கலம் வென்று ப்ரோ கார்ட் ( PRO CARD) பிரிவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதாரண மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக இருக்கும் உமர் பரூக்கின் மகன் பல்வேறு ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று  பட்டங்களை வென்றதோடு, தற்போது ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகி தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார் இந்த தமிழ்நாட்டின் அர்னால்ட்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User