தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் யார் யார்? அறிவித்தார் தொல். திருமாவளவன்...

திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் யார் யார் தேர்தலில் போட்டியிடப் போகிறார்கள் என்று தொல்.திருமாவளவன் அறிவித்தார்.

Mar 19, 2024 - 12:24
0 258
தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர்கள் யார் யார்? அறிவித்தார் தொல். திருமாவளவன்...

திமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு தொகுதிகளிலும் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் விசிக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்ப்பாக போட்டியிடும் வேட்பாளர்களை தொல். திருமாவளவன் இன்று (19.3.2024) செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார். சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் விசிக பொதுச் செயலாளரான ரவிக்குமாரும் போட்டியிடுவதாக அறித்தார். 2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் இதே தொகுதிகளில் போட்டியிட்டு இருவரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User