வரதட்சணை பிரச்னையால் இளம்பெண் தற்கொலை... மாமியார், மாமனாரை தீயிட்டுக் கொளுத்திய பெண்வீட்டார் !!

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், ஆத்திரமடைந்த பெண் வீட்டார், வீட்டை தீயிட்டு கொளுத்தியதில் பெண்ணின் மாமியார், மாமனார் உயிரிழந்தனர்.

Mar 19, 2024 - 12:30
0 204
வரதட்சணை பிரச்னையால் இளம்பெண் தற்கொலை... மாமியார், மாமனாரை தீயிட்டுக் கொளுத்திய பெண்வீட்டார் !!

பிரயாக்ராஜை சேர்ந்த அன்சிகா கேசர்வானி என்ற பெண்ணுக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணமானது. இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு மாப்பிள்ளை வீட்டார் பிரச்னை செய்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் அன்சிகா தனது கணவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக இருவீட்டார் இடையேயும் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியதில், பெண்ணின் மாமனாரும், மாமியாரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ள பிரயாக்ராஜ் போலீசார், நள்ளிரவில் இருவீட்டாருக்கும் இடையே சண்டை முற்றியதைத் தொடர்ந்து, பெண்ணின் தாய்வழி உறவினர்கள் அன்சிகா கணவர் வீட்டை தீயிட்டுக் கொளுத்தியதாகக் கூறினார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மூலம் வீட்டில் பரவிய தீ அணைக்கப்பட்ட நிலையில், பெண்ணின் மாமியார் மாமியாரான ராஜேந்திர கேசர்வானி - ஷோபா தேவி ஆகியோர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User