அமரன் படக்குழுவிற்கு லோகேஷ் பாராட்டு…!

மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்று வரும் அமரன் படத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். 

Nov 02, 2024 - 17:56
0 523
அமரன் படக்குழுவிற்கு லோகேஷ் பாராட்டு…!

இந்த ஆண்டு தீபாவளிக்கு ’அமரன்’, ’லக்கி பாஸ்கர்’, ’பிரதர்’ மற்றும் ’ப்ளடி பெக்கர்’ படங்கள் வெளியாகின. இதில், சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் அமரன் படத்திற்கு பலதரப்பை சேர்ந்தவர்களும் பாராட்டை பொழிந்து வருகின்றனர். 

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ப்ரீ ரிலீஸ் ஸ்கீர்னில் இந்த படத்தை பார்த்து விட்டு கண் கலங்கியதாக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். இதேபோன்று பல பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்தனர். 

இந்நிலையில், அமரன் படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜ் தனது பாராட்டை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User