அமரனுக்கு சூப்பர்ஸ்டார் வாழ்த்து... தயாரிப்பு நிறுவனம் உருக்கம்!

மக்களிடைய பெரும் வரவேற்பை பெற்று வரும் அமரன் படத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Nov 02, 2024 - 17:04
0 483
அமரனுக்கு சூப்பர்ஸ்டார் வாழ்த்து... தயாரிப்பு நிறுவனம் உருக்கம்!

இந்த ஆண்டு தீபாவளிக்கு ’அமரன்’, ’லக்கி பாஸ்கர்’, ’பிரதர்’ மற்றும் ’ப்ளடி பெக்கர்’ படங்கள் வெளியாகின. இதில், சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி நடிப்பில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் அமரன் படத்திற்கு பலதரப்பை சேர்ந்தவர்களும் பாராட்டை பொழிந்து வருகின்றனர். 

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

ப்ரீ ரிலீஸ் ஸ்கீர்னில் இந்த படத்தை பார்த்து விட்டு கண் கலங்கியதாக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார். இதேபோன்று பல பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்தனர். 

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமரன் படத்தை பார்த்து விட்டு பாராட்டியுள்ளார். 

படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்திய ரஜினிகாந்த் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அப்பதிவில், ” தனது நண்பர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.

நேற்று தனது நண்பர் கமல்ஹாசன் அவர்களை தொலைபேசியில் அழைத்த சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தைத் தயாரித்ததற்காக மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.

அத்துடன், அமரன் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன்,ஒளிப்பதிவாளர் சாய் உள்ளிட்ட அமரன் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளையும் வாழ்த்தையும் தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User