சாய் கிஷோரை விமர்சித்த பயிற்சியாளர்...தினேஷ் கார்த்திக் கண்டனம்

"அரையிறுதி வரை அணியை கொண்டு சென்ற சாய் கிஷோரை விமர்சிப்பது சரியல்ல"

Mar 05, 2024 - 11:31
0 287
சாய் கிஷோரை விமர்சித்த பயிற்சியாளர்...தினேஷ் கார்த்திக் கண்டனம்

மும்பைக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு கேப்டன் சாய் கிஷோர் தான் காரணம் என்று தமிழ்நாடு அணி பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி விமர்சித்துள்ளார்.

பாந்த்ரா குல்ரா காம்ப்ளக்ஸில் நடைபெற்ற இரண்டாவது ரஞ்சி அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்ததால் தான் தமிழ்நாடு அணி தோற்றது என்று பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி தெரிவித்தார். மேலும், பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பவுலிங் எடுத்திருக்க வேண்டும். ஆனால், கேப்டன் சாய் கிஷோர் தனது உள்ளுணர்வின் படி பேட்டிங்கை தேர்வு செய்தார் என்றார். தமிழ்நாடு அணி கேப்டனை பயிற்சியாளர் வெளிப்படையாக விமர்சித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், அரையிறுதி வரை அணியை கொண்டு சென்ற சாய் கிஷோரை விமர்சிப்பது சரியல்ல என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User