Gold Rate : உச்சத்தைத் தொட்ட தங்க விலை... "என்னது இவ்வளவா?"

கடந்த 20 நாட்களில் மட்டும், தங்கம் சவரனுக்கு ரூ.2,000-க்கு மேல் உயர்ந்துள்ளது.

Mar 05, 2024 - 11:31
0 196
Gold Rate : உச்சத்தைத் தொட்ட தங்க விலை... "என்னது இவ்வளவா?"

சென்னையில் கிராம் தங்கத்தின் விலை ரூ.6,000ஐ கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. குறிப்பாக, 2ம் தேதி சவரனுக்கு ரூ.800 உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. அதன் பின்னர் நேற்று (மார்ச் 4) ரூ.80 ஆக குறைந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 5) மீண்டும் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120க்கு விற்பனை ஆகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.85 அதிகரித்து, ரூ.6,015 ஐ தொட்டுள்ளது. இந்த வரலாறு காணாத விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 20 நாட்களில் மட்டும், தங்கம் சவரனுக்கு ரூ.2,000-க்கு மேல் உயர்ந்துள்ளது. அதேபோல், 1 கிராம் வெள்ளி ரூ.78.20 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.78,200 ஆகவும் விற்பனை ஆகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User