Selvaraghavan NetWorth: “காட்ஃபாதர் ஆஃப் கொக்கி குமார்” செல்வராகவன் சொத்து மதிப்பு தெரியுமா..?

இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

Mar 05, 2024 - 11:15
0 374
Selvaraghavan NetWorth: “காட்ஃபாதர் ஆஃப் கொக்கி குமார்” செல்வராகவன் சொத்து மதிப்பு தெரியுமா..?

காதல் கொண்டேன் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், முதல் படத்திலேயே தனது தனித்துவத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்காக இருந்த வழக்கமான பிம்பங்களை தனது தம்பி தனுஷின் மூலம் தகர்த்தெறிந்து புதிய பாதையை உருவாக்கினார். இன்னொரு பக்கம் செல்வராகவன் – தனுஷ் கூட்டணிக்கு யுவனின் இசையும் பெரும் பலமாக அமைந்தது. இதனையடுத்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என அடுத்தடுத்து தரமான படங்களை இயக்கி கெத்து காட்டினார்.

 

புதுப்பேட்டை கேங்ஸ்டர் ஜானர் படங்களுக்கான புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது என்றால், அதில் தனுஷின் கொக்கி குமார் கேரக்டர் டாப் ஹீரோக்களையே அதிர வைத்தது. அதேபோல், கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் மேக்கிங்கில் மிரட்டியெடுத்தது. இதனால் ஒருகட்டத்தில் கோலிவுட்டின் அடுத்த மணிரத்னம் என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் செல்வராகவன். ஆனால், அதன் பின்னர் வெளியான மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம், NGK, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் ஆகியவை எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை.

 

இதனிடையே நடிகராகவும் களமிறங்கிய செல்வராகவன், இப்போது கோலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் ஆக்டராக வலம் வருகிறார். விரைவில் 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் 2ம் பாகம் இயக்கவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் டிவிட்டரில் அடிக்கடி தத்துவ முத்துகளை உதிர்த்து வருகிறார் செல்வராகவன். இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் செல்வராகவனின் சொத்து மதிப்பு, சம்பள விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி செல்வராகவனின் சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. படங்கள் இயக்குவதற்கு 2 முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகவும், நடிப்பதற்கு கால்ஷீட்டுக்கு ஏற்ப லட்சங்களில் சம்பளம் பெறுவதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் BMW, ஆடி ஆகிய சொகுசு கார்களை சொந்தமாக வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User