மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு..! - நாளை இந்த செட்டியூல்தான்...
மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஏப்ரல் 19 ) மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கான அறிவிப்பில், மக்களவைத் தேர்தலையொட்டி சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி, சென்னையில் காலை 8 மணி முதல் 11மணி வரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலான நேரங்களில் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்கும்.
காலை 5 முதல் 8 வரை, காலை 11 முதல் மாலை 5 வரை, இரவு 8 முதல் 10 வரையிலான நேரங்களில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)