Yuvan: இன்ஸ்டா ஐடியை டெலிட் செய்த யுவன்..! GOAT விசில் போடு சாங் ட்ரோல் தான் காரணமா..?

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டா ஐடியை டெலிட் செய்துள்ளது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Apr 18, 2024 - 13:22
0 327
Yuvan: இன்ஸ்டா ஐடியை டெலிட் செய்த யுவன்..! GOAT விசில் போடு சாங் ட்ரோல் தான் காரணமா..?

சென்னை: கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சில வருடங்களாக ஹிட் பாடல்கள் கொடுக்காமல் இருந்த யுவன், லவ் டுடே திரைப்படம் மூலம் சூப்பராக கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் லைம்-லைட்டில் வந்த யுவன், கவினின் ஸ்டார், விஜய்யின் கோட் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் விஜய்யின் கோட் படத்தில் யுவனின் இசைக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், திடீரென அவர் தனது இன்ஸ்டா ஐடியை டெலிட் செய்துள்ளது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.  

அதாவது, புதிய கீதை படத்திற்குப் பின்னர் விஜய் – யுவன் காம்போ கோட் மூவியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி கோட் ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை கம்போஸ் செய்துவிட்டார் யுவன். அதன்படி கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெறித்தனமாக உருவாகியுள்ளதாகவும், இது யுவனின் தர லோக்கல் கானா பாடலாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. இதனால் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளின் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதனையடுத்து ஒருவழியாக கடந்த 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. விசில் போடு என்ற டைட்டிலில் விஜய் பாடிய இந்தப் பாடலில், அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோரும் ஆட்டம் போட்டிருந்தனர். விசில் போடு சாங் அதிக எதிர்பார்ப்போடு வெளியானதால் 24 மணி நேரத்திற்குள்ளாகவே பல மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. ஆனால், யுவனின் இசையை ரசிகர்கள் ரொம்பவே ட்ரோல் செய்து வந்தனர்.  

மங்காத்தா படத்தில் அஜித்துக்காக தரமான குத்து பாடல் கொடுத்த யுவன், கோட் படத்தில் விஜய்யை ஏமாற்றிவிட்டதாக கமெண்ட்ஸ் செய்தனர். முக்கியமாக விஜய், பிரசாந்த், பிரபுதேவா மூவருமே பெஸ்ட் டான்ஸர்ஸ், அப்படி இருக்கும் போது அவர்களுக்காக இன்னும் தரமான பாடலை கொடுத்திருக்கலாம் என நெகட்டிவான விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ச்சியாக யுவனின் விசில் போடு பாடல் ட்ரோல் செய்யப்படுவதால் தான் யுவன் தனது இன்ஸ்டா ஐடியை டெலிட் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் யுவன், இன்ஸ்டாவில் இருந்து வெளியேறியதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இதுபற்றி யுவன் தாப்பில் இருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User