திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணுக்கு ஊசி மூலம் எய்ட்ஸ் ரத்தம் செலுத்திய இளைஞர்

திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணுக்கு ஊசி மூலம் எய்ட்ஸ் ரத்தம் செலுத்திய இளைஞரால் தப்பி ஒடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Apr 11, 2026 - 11:06
0 616
திருமணம் செய்ய மறுத்த இளம்பெண்ணுக்கு ஊசி மூலம் எய்ட்ஸ் ரத்தம் செலுத்திய இளைஞர்
ஊசி மூலம் எய்ட்ஸ் ரத்தம் செலுத்திய வாலிபர்

தெலுங்கானா மாநிலம் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு அவரது நெருங்கிய உறவினரான மனோகர் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து இருந்தனர். ஆனால், மனோகரின் பெற்றோருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் மனோகருக்கும் எச்.ஐ.வி. தொற்று இருக்கலாம் என்று பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகம் ஏற்பட்டது. 

இதனால் இளம்பெண்ணின் தந்தை, மனோகரை எச்.ஐ.வி. தொற்று பரிசோதனை செய்ய வைத்தனர். மனோகருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது டெஸ்ட் மூலம் உறுதியானது. இதன் காரணமாக, பெண்ணின் குடும்பத்தினர் நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணத்தை கேன்சல் செய்தனர். ஆனால் மனோகர் தொடர்ந்து இளம்பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினர். 

இதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, மனோகர் தனது ரத்தம் அடங்கிய ஊசியுடன் அவரது வீட்டிற்குச் சென்று, அதை வலுக்கட்டாயமாக அந்த பெண்ணுக்கு செலுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் மனோகரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை நீதிமன்றக் காவலில் வைக்க 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User