தமிழகம் முழுவதும் கியூ.ஆர் கோர்டுன் பூத் சிலிப் வழங்கும் பணி நாளை துவக்கம்

தமிழ்நாடு முழுவதும் கியூ.ஆர்.கோடுன் கூடிய பூத் சிலிப் வழங்கும் பணியை தேர்தல் அலுவலர்கள் நாளை துவங்கப்பட உள்ளது. 

Apr 11, 2026 - 11:59
0 267
தமிழகம் முழுவதும் கியூ.ஆர் கோர்டுன் பூத் சிலிப் வழங்கும் பணி நாளை துவக்கம்
பூத் சிலிப் வழங்கும் பணி நாளை துவக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளுக்கு 4032 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் வழங்கும் பணி நாளை முதல் தொடங்க உள்ளது.  தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான பூத் சிலிப் மொத்தமாக சென்னையில் அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பூத் சிலிப்பில் கியூ.ஆர்.கோடு உடன் அச்சடிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பெயர், வரிசை எண் மற்றும் பாகம் எண் பெரிதாக அச்சிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு எளிதாக சென்று வாக்களிக்கும்கும் வகையில் இந்த வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் வாக்காளர் தகவல் சீட்டு சீட்டு வினியோகிக்கும் பணி நாளை தொடங்கி 17ந் தேதிக்குள் முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.  பூத் சிலிப் வழங்கும் பணி வீடு வீடாக தொடங்கப்படுகின்ற நிலையில் வீடு பூட்டப்பட்டிருந்தால் 2 முறை வாக்குச் சாவடி அலுவலர் வீட்டிற்கு வருவார். அப்பொழுதும் யாரும் இல்லை என்றால் அருகிலுள்ள வீடுகளில் தகவல் தெரி வித்துவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படும்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 28 லட்சம் வாக்காளர்களில் உள்ளனர். 4,085 வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் தேர்தல் பணி நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஊழியர்களே இந்த பணியில்  தேர்தல் ஆணையம் ஈடுபடுத்த உள்ளது குறிப்பிடதக்கது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User