"கடமையை செய்யாம கமெண்ட் அடிக்கக் கூடாது" - விமானத்தில் வந்து ஓட்டுப்போட்ட இயக்குனர் சுசி.கணேசன் !

நாம ஒருத்தர் மட்டும் என்னத்த மாற்றப்போறோம்னு நினைக்காம, நம்மை மாதிரி ஒவ்வொரு ஆளும் சேர்ந்தாதான் மாற்ற முடியும்-இயக்குனர் சுசி.கணேசன்

Apr 19, 2024 - 20:19
0 429
"கடமையை செய்யாம கமெண்ட் அடிக்கக் கூடாது" - விமானத்தில் வந்து ஓட்டுப்போட்ட இயக்குனர் சுசி.கணேசன் !

இயக்குனர் சுசி கணேசன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றும்விதமாக, மும்பையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து வாக்களித்தார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பல அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். 

இந்நிலையில், திருட்டுப்பயலே, கந்தசாமி, 5 ஸ்டார் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் சுசி கணேசன்,  வாக்களிப்பதற்காக மும்பையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அதைத்தொடர்ந்து சென்னை மடுவங்கரை ஐந்து பர்லாங் சாலையில் உள்ள 236-வது வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஒவ்வொருவரும் அரசியல் அமைப்பை குறை சொல்வதை ஈசியாகவும், ஸ்டைலாகவும் ஆக்கிவிட்டோம். முதலில் நமது கடமையை செஞ்சமான்னு பாக்கணும். கடமையை செய்யாம கமெண்ட் அடிக்கக் கூடாது. அதுக்குத்தான் இந்த effort. நாம ஒருத்தர் மட்டும் என்னத்த மாற்றப்போறோம்னு நினைக்காம, நம்மை மாதிரி ஒவ்வொரு ஆளும் சேர்ந்தாதான் மாற்ற முடியும். எங்கிருந்தாலும் வந்து வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை" எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User