என்னய்யா இது சோதனை: தங்கம் விலை சரிவு, வெள்ளி உயர்வு 

தங்கம் விலை இன்று சற்றே சரிந்துள்ள நிலையில், வெள்ளி விலை மட்டும் உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

Jan 27, 2026 - 04:20
0 385
என்னய்யா இது சோதனை: தங்கம் விலை சரிவு, வெள்ளி உயர்வு 
தங்கம் விலை சரிவு, வெள்ளி உயர்வு 

சர்வதேச சந்தையின் அடிப்படையில் நாள்தோறும் தங்கம், வெள்ளி விலை மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை கடுமையாக உயர்ந்து, சவரன் ஒருலட்சத்தை தாண்டி விற்பனை ஆகி வருகிறது. 

தங்கம் டப் கொடுக்கும் வகையில் வெள்ளியும் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கிராம் 400 ரூபாயை விரைவில் தொட்டுவிடும் என தெரிகிறது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை மேலும் கிடு,கிடுவென உயர்ந்தது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,025க்கும், பவுனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,20,200க்கு விற்பனையானது.

தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் நேற்று அதிரடியாக உயர்ந்தது. வெள்ளி விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.375க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.3.75 லட்சத்துக்கும் விற்பனையானது. 

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.1,19,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை குறைந்தாலும், வெள்ளி விலை உயர்வை கண்டுள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.12 உயர்ந்துள்ளது. கிலோ வெள்ளி ரூ 12 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,87,000 விற்பனை ஆகிறது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User