விராட் கோலி மிகவும் திமிர் பிடித்தவர்: ரவிசாஸ்திரி சர்ச்சை கருத்து 

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மிகவும் திமிர் பிடித்தவர் என முன்னாள் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருக்கிறார். 

Jun 15, 2026 - 16:20
0 241
விராட் கோலி மிகவும் திமிர் பிடித்தவர்: ரவிசாஸ்திரி சர்ச்சை கருத்து 
ரவிசாஸ்திரி சர்ச்சை கருத்து 

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு நாள், டெஸ்ட், டி 20 என அனைத்து தர போட்டிகளிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். இந்திய அணி கேப்டனாகவும் சிறப்பாக அணியை வழி நடத்தி இருக்கிறார். இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல மிக முக்கிய பங்கு ஆற்றிய வீரர் விராட் கோலி. டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர். ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். 

விராட் கோலி குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசியிருக்கும் ரவிசாஸ்திரி, “திமிர்பிடித்தவர், அடங்காதவர், எல்லாவற்றையும் எல்லை வரை கொண்டு செல்பவர் என்று மைதானத்தில் கோலியைப் பற்றிச் சொல்வது அனைத்தும் உண்மைதான். ஆனால், மைதானத்திற்கு வெளியே அவர் இதற்கு முற்றிலும் நேர் எதிரானவர். 

ஆட்டத்திற்குள் நுழையும்போது ஒரு விதமாகவும், வெளியே வரும்போது மற்றொரு விதமாகவும் மாறும் குணம் கொண்டவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். மேலும், கடந்த சில ஆண்டுகளில் சிவப்புப் பந்து கிரிக்கெட்டின் மிகப்பெரிய தூதர்களில் ஒருவராக அவர் திகழ்ந்துள்ளார். இந்த வகை கிரிக்கெட் மேம்படுத்துவதில் அவரது தாக்கம் அளப்பரியது” என கூறியுள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User