உலகக் கோப்பையில் மெஸ்ஸி சாதனை, ஸ்பெயினுக்கு அதிர்ச்சி!

மெஸ்ஸி ஹாட்ரிக் அடித்து அசத்திய நிலையில், ரொனால்டோ விமர்சனங்களை சந்தித்து வருகிறார். எம்பாபே கோல் வேட்டையைத் தொடங்கியுள்ள நிலையில், ஸ்பெயின் டிராவும் ‘மெர்லின்’ வாத்தும் கவனம் ஈர்த்துள்ளன.

Jun 25, 2026 - 15:30
0 206
உலகக் கோப்பையில் மெஸ்ஸி சாதனை, ஸ்பெயினுக்கு அதிர்ச்சி!
மெஸ்ஸி

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்  தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரை ஒரு முறைகூட தங்கக் காலணியைப் பெறாத சூப்பர் ஸ்டார் மெஸ்ஸி, அல்ஜீரியாவுக்கு எதிரான தன் முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்தார். அதிக வயதில் ஹாட்ரிக் சாதனை படைத்தது, உலகக் கோப்பையில் அதிக கோல்களை அடித்தவர் என்ற மிராஸ்லாவ் குளோசின் சாதனையைச் சமன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார்.

ஒரு பக்கம் மெஸ்ஸி பாராட்டுகளை வாங்கிக் குவிக்கும்போது, மறுபக்கம் அவரது சக போட்டியாளரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. உலகக் கோப்பை போட்டியில் காங்கோவிடம் 1-1 என்ற கோல்கணக்கில் போர்ச்சுகல் டிரா செய்தது. இந்த விமர்சனங்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்து தங்கக் காலணியைச் சொந்தமாக்கிய எம்பாபே, இம்முறையும் அந்த இலக்கைக் குறிவைத்து நகர்கிறார். 27 வயதான அவர், செனகல் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 2 கோல்களை அடித்து முன்னேறி வருகிறார். உலகக் இந்த முறை ஸ்பெயின் கோப்பையை வெல்லும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டு இருக்க முதல் போட்டி யிலேயே கேப் வெர்டே என்ற மிகச்சிறிய அணியிடம் நொண்டியடித்தது ஸ்பெயின். சுமார் ஐந்து லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு மிகச்சிறிய தீவுக் கூட்டமான கேப் வெர்டே (Cape Verde) 0-0 என்ற வகையில் டிரா செய்தது சகலரையும் திகைக்கவைத்திருக்கிறது.

நட்சத்திர வீரர்களைத் தாண்டி. கால்பந்து ரசிகர்களை அதிகம் கவர்ந்த பெருமை மெர்லினையே சேரும். மெர்லின் எந்த நாட்டின் வீரர் என்று கேட்காதீர்கள், அது ஒரு வாத்து. இந்த வாத்து (ஸாரி மெர்லின்), மெக்ஸிகோ பங்கேற்கும் முதல் போட்டியில், அந்நாட்டின் மிகச்சிறிய பொம்மை ஜெர்ஸியையும். தம்மாத்தூண்டு சாக்ஸையும் அணிந்து மெக்ஸிகோ சிட்டி சாலைகளில் வலம் வந்திருக்கிறது. அந்த வாத்தை மைதானத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களை வென்றுள்ளது மெர்லின்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User