FIFA World Cup 2026 : நாக் அவுட் சுற்றுக்கு ஈக்வடார், ஐவரி கோஸ்ட் முன்னேற்றம் 

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'இ' பிரிவு லீக் ஆட்டங்களில், ஐவரி கோஸ்ட் மற்றும் ஈக்வடார் அணிகள் தங்களது ஆட்டங்களில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

Jun 26, 2026 - 01:41
0 231
FIFA World Cup 2026 : நாக் அவுட் சுற்றுக்கு ஈக்வடார், ஐவரி கோஸ்ட் முன்னேற்றம் 
நாக் அவுட் சுற்றுக்கு ஈக்வடார், ஐவரி கோஸ்ட் முன்னேற்றம் 

ஐவரி கோஸ்ட் சாதனை

பிலாடெல்பியா மைதானத்தில் நடைபெற்ற 'இ' பிரிவு லீக் ஆட்டத்தில் குராசோ மற்றும் ஐவரி கோஸ்ட் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 7-ஆவது நிமிடத்திலேயே ஐவரி கோஸ்ட் அணியின் யான் டியோமான்டெ கொடுத்த அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி, நட்சத்திர வீரர் நிகோலஸ் பெபெ அபாரமாக முதல் கோலை அடித்து அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். இதன் பின்னர் இரு அணிகளும் தீவிரமாக முயன்றும் முதல் பாதியில் வேறு கோல்கள் எதுவும் அடிக்கப்படவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியின் 64-ஆவது நிமிடத்தில், இப்ராகிம் சங்காரே கொடுத்த பந்தை மீண்டும் நிகோலஸ் பெபெ கோலாக மாற்றி அசத்தினார். இதனால் ஐவரி கோஸ்ட் அணி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதிவரை குராசோ அணியின் கோல் போடும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இறுதியில் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஐவரி கோஸ்ட் அணி, உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

ஜெர்மனியை வீழ்த்தி ஈக்வடார் வெற்றி

நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற இதே பிரிவின் மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை ஈக்வடார் எதிர்கொண்டது. போட்டியின் 9-ஆவது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் ஃப்ளோரியன் விரட்ஸ் கொடுத்த அசிஸ்ட் மூலம் லெராய் சேன் முதல் கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார். ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே (9-ஆவது நிமிடம்) ஈக்வடார் அணியின் பெட்ரோ விட் அமைத்துக் கொடுத்த செட்-அப்-ஐ பயன்படுத்தி நில்சன் அன்குலோ பதில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.

இரண்டாவது பாதியில் வெற்றி இலக்கை நோக்கி இரு அணிகளும் அதிரடி காட்டின. ஆட்டத்தின் 77-ஆவது நிமிடத்தில் ஈக்வடார் அணியின் கெவின் ரோட்ரிகுயிஸ் கொடுத்த அசிஸ்ட் மூலம் கொன்சலோ பிளாடா ஒரு சிறப்பான கோலை அடித்தார். இதன் மூலம் ஈக்வடார் அணி 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதி நிமிடம் வரை ஜெர்மனியால் பதிலடி கோல் அடிக்க முடியாததால், ஈக்வடார் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User