STOP DRUG - START RUN போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஒட்டம்: பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் 

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தானில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு ஓடினார்.

Jun 26, 2026 - 01:18
0 541
STOP DRUG - START RUN போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஒட்டம்: பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் 
பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் ஓடிய முதல்வர் விஜய் 

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினம் (International Day Against Drug Abuse and Illicit Trafficking) கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருள் இல்லாத உலகத்தை உருவாக்குவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.  போதைப்பொருட்களால் ஏற்படும் உடல்நலக் கேடுகள், சமூக சீரழிவுகள் மற்றும் குற்றங்கள் குறித்து உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்த நாளில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் கருத்தரங்குகள், விழிப்புணர்வுப் பேரணிகள் மற்றும் மாரத்தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன.தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு: சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாட்டில் விழிப்புணர்வு பிரச்சாரப் பாடல்களை முதல்வர் விஜய் நேற்று  வெளியீட்டு இருந்தார். 

இந்த நிலையில், STOP DRUG - START RUN என்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரை சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் விஜய், அங்கு வைக்கப்பட்டு இருந்த பலகையில் விளையாட்டை எடு போதையை விடு என்று எழுதி முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். இதை தொடர்ந்து போதை ஒழிப்பு உறுதிமொழியை விஜய் வாசிக்க விழாவில் கலந்து கொண்டவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். 

இதன் பின்னர் மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் விஜய். பொதுமக்களுடன் சேர்ந்து மாரத்தான் விழ்ப்புணர்வு ஓட்டத்திலும் கலந்து கொண்டு ஓடினார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, வெங்கட்ராமன் உள்ளிட அரசு அதிகாரிகளும் மாரத்தானில் ஓடினர். 

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 2
Wow Wow 1
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User