முதல்வராக விஜய் மே 7-ம் தேதி பதவியேற்பு: கலைவாணர் அரங்கில் பதவியேற்பு விழா 

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் மே 7-ம் தேதி பதவியேற்க உள்ளார். நேரு விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு என தகவல்.

May 05, 2026 - 08:01
0 1.4
முதல்வராக விஜய் மே 7-ம் தேதி பதவியேற்பு: கலைவாணர் அரங்கில் பதவியேற்பு விழா 
கலைவாணர் அரங்கில் பதவியேற்பு விழா 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஏப்ரல் 23-ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்றைய தினம் எண்ணப்பட்டது. இதில் தமிழக வெற்றிக் கழக சந்தித்த முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி பெற்றது. 1கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும், தனிபெரும் கட்சியாக தவெக வெற்றி பெற்று உள்ளது. தற்போது பனையூர் தவெக கட்சி அலுவலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் விஜய் வழங்குவார். இதை தொடர்ந்து முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். 

மே 8-ம் தேதிக்கு முன்பாக புதிய அரசு பதவியேற்க வேண்டும். அதனால் மே 7-ம் தேதி தமிழக முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்பு விழாவை கலைவாணர் அரங்கில் நடத்தலாமா என அரசு தரப்பில் யோசித்து வருகிறார்கள். நேரு உள் விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம் உட்பட பல இடங்கள் பதவியேற்பு நிகழ்ச்சியின் பட்டியலில் உள்ளன. 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User