Vijay Ajith: ‘அந்த விஷயத்தில்’ விஜய்யை நெருங்க முடியாத அஜித்… கோலிவுட்டையே அதிர வைத்த அப்டேட்!

கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களான விஜய்யும் அஜித்தும் தங்களது அடுத்த படங்களில் பிஸியாகிவிட்டனர். விஜய் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துவிட்ட போதும், அஜித்தால் ஒரு விஷயத்தில் அவரை நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Apr 03, 2024 - 13:25
Updated: 2 years ago
0 354
Vijay Ajith: ‘அந்த விஷயத்தில்’ விஜய்யை நெருங்க முடியாத அஜித்… கோலிவுட்டையே அதிர வைத்த அப்டேட்!

சென்னை: விஜய், அஜித் இருவருமே 90களில் அறிமுகமாகி தற்போது மாஸ் ஹீரோக்களாக சம்பவம் செய்து வருகின்றனர். ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்த இருவரும், அதன் பின்னர் தனித் தனி ரூட்டில் பயணிக்கத் தொடங்கினர். விஜய், அஜித்தின் படங்கள் ஒரேநாளில் ரிலீஸானால் திரையரங்குகளில் திருவிழா தான். ரஜினி, கமல் வரிசையில் அடுத்து விஜய், அஜித்துக்கு தான் ரசிகர்கள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

கடைசியாக விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் கடந்தாண்டு பொங்கல் ரேஸில் களமிறங்கின. இந்நிலையில் விஜய் விரைவில் அரசியலுக்கு செல்லவிருப்பதால், இனி அஜித் – விஜய் ரேஸ் சூடு பிடிக்குமா என்பது சந்தேகமே. அதேநேரம் விஜய்யின் கோட் திரைப்படம் இந்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படமும் இந்தாண்டு வெளியாகலாம்.  

இந்நிலையில், விஜய் தனது கடைசிப் படமான தளபதி 69 இயக்குநரை முடிவு செய்வதில் பிஸியாகிவிட்டார். அதேபோல் அஜித் தனது ஏகே 63 படமான குட் பேட் அக்லி பற்றிய அபிஸியல் அப்டேட்டும் வெளியாகிவிட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்தப் படத்திற்காக அஜித் 163 கோடி ரூபாய் சம்பளம் வாங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

ஆனால், தளபதி 69 படத்திற்காக விஜய் வாங்கும் சம்பளம் கோலிவுட் வட்டாரத்தையே கிறுகிறுக்க வைத்துள்ளது. அதாவது இந்தப் படத்திற்காக விஜய்க்கு 250 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதுதான் கோலிவுட்டில் ஹீரோவுக்கு கொடுக்கப்படும் அதிக சம்பளம் எனக் கூறப்படுகிறது. விஜய் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துவிட்டாலும், அஜித்தால் அவரை ஓவர்டேக் செய்ய முடியவில்லை என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User