மதுபோதையில் திருநங்கைகள் அட்டகாசம்,கடைகளை அடித்து நொறுக்கிய அட்டூழியம் போலீசார் தீவிர விசாரணை

சென்னை பெரியமேடு பகுதியில் மதுபோதையில் 5-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அட்டகாசம்; மளிகை கடை மற்றும் சாலையோர கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபர்ரை ஏற்படுத்தி உள்ளது. 

Feb 23, 2026 - 05:15
0 306
மதுபோதையில் திருநங்கைகள் அட்டகாசம்,கடைகளை அடித்து நொறுக்கிய அட்டூழியம் போலீசார் தீவிர விசாரணை
மதுபோதையில் திருநங்கைகள் அட்டகாசம்,கடைகளை அடித்து நொறுக்கிய அட்டூழியம்

சென்னை பெரியமேடு பகுதியில் மதுபோதையில் திருநங்கைகள் தெருக்களில் தகராறில் ஈடுபட்டனர். அப்போது நெல்சன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை, தெரசா என்பவருக்கு சொந்தமான சாலையோரக் கடை மற்றும் சில கடைகள் என கட்டைகளால் அடித்து நொறுக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நெல்சன் என்பவரின் உறவினரின் மகன் திருநங்கையாக கடந்த 1.5 வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். திருநங்கை தரப்பினருக்கும், மற்றொரு திருநங்கை தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இதனால், 15 வயது திருநங்கையின் மாமனான நெல்சன் கடையை மற்றொரு தரப்பு திருநங்கைகள் நேற்று முன்தினம் இரவு தாக்கியதாகவும், பின் செல்லும் வழியில் தள்ளுவண்டி கடைகளை அடுத்து நொறுக்கி சென்றதாகவும் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளோடு பெரியமேடு காவல் நிலையத்தில் மளிகை கடை உரிமையாளரான நெல்சன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பெரியமேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User