ஆகாஷ் உடலை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் போலீசாரே உடல் அடக்கம். நீதிமன்றம் எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு பெரும் சம்பவம் சிவகங்கை மாவட்டம்  மானாமதுரையைச் சேர்ந்த் 24 வயதான பொறியியல் இளைஞரின் கொலை வழக்கு.

Jun 16, 2026 - 05:07
0 245
ஆகாஷ் உடலை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் போலீசாரே உடல் அடக்கம். நீதிமன்றம் எச்சரிக்கை.
manamadurai engineering graduate murder case

தமிழ்நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஒரு பெரும் சம்பவம் சிவகங்கை மாவட்டம்  மானாமதுரையைச் சேர்ந்த் 24 வயதான பொறியியல் இளைஞரின் கொலை வழக்கு.

மார்ச் 5 அன்று ஆகாஷ்,பி.ஜெயக்குமார் மற்றும் ஆர்.அழகர் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.இச்சம்பவம் அறிந்த காவல்துறையினர் மறுநாள் அதிகாலையில் சீருடை அணியாமல் ஆகாஷ் டெலிசனையும் மற்றும் அவருடன் இருந்த குணா ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட ஆகாஷை விசாரணையில் பேரில் அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். இந்த வழக்கை பாரதிய நியாய சம்ஹிதையின் பிஎன்எஸ் 103 வது பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றி சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் பட்டியல் இனத்தவர் என்பதால் அதிகாரிகள் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் 1989 இன் பிரிவு 3(2)(v) ஐயும் பயன்படுத்தி விசாரணையை நடத்தினர்.  ஆகாஷை கைது செய்யப்பட்ட காவல் துறையினரிடம் விசாரித்த போது சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற போது பாலத்திலிருந்து குதித்தால் உயிரிழந்தார் என்று காவல் தரப்பு கூறியது. 

ஆனால் மார்ச் 7 அன்று, அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கால் முறிவுக்காக சிகிச்சை பெற்று வந்த ஆகாஷின் வாக்கு மூலத்தை மானாமதுரை நீதித்துறை நடுவர் பதிவு செய்தது காவல்துறையினர் தனது கண்களைக் கட்டி, இரும்புக் கம்பியால் தனது காலைக் கொடூரமாக முறித்ததாக ஆகாஷ் தெளிவாகக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் கடுமையான தசை, நரம்பு மற்றும் இரத்த நாளச் சேதம், அத்துடன் மூளையின் முன்பகுதியில் ஏற்பட்ட இரத்தக் கசிவு உள்ளிட்ட 28 உள் மற்றும் வெளிக்காயங்கள் இருப்பது தெரியவந்தது இறுதி விசாரணையில் ஒரு ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை  ஒரு தலைமைக் காவலர் உட்பட குறைந்த ஆறு காவல்துறைப் பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவத்தால் துயர்வுற்ற நிலையில் குடும்பத்தினரும் சமூகத்தினரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக முறைப்படி கைது செய்து குற்றவியல் ரீதியாக வழக்குத் தொடரக் கோரி, கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அவரது உடலை ஏற்க மறுத்து தொடர் போராட்டங்களை  நடத்தி வந்தனர். இதற்கிடையில் மதுரை உயர்  நீதிமன்றம்  கூறியது ஆகாஷின் உடலை வாங்க வில்லை என்றால் போலீசாரே அடக்கம் செய்வார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User