Rajini: “அது அவங்க பஞ்சாயத்து..” கூலி டைட்டில் டீசர் Copyright விவகாரம்… எஸ்கேப்பான ரஜினி!

கூலி படத்தின் டைட்டில் டீசரில் தனது பாடலை பயன்படுத்தியதற்கு எதிராக நோட்டீஸ் வழங்கியுள்ளார் இளையராஜா. இதுபற்றி ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.

May 04, 2024 - 14:54
0 418
Rajini: “அது அவங்க பஞ்சாயத்து..” கூலி டைட்டில் டீசர் Copyright விவகாரம்… எஸ்கேப்பான ரஜினி!

சென்னை: வேட்டையன் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது சென்னை திரும்பினார். தசெ ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் அக்டோபரில் வெளியாகவுள்ளது. மும்பையில் நடைபெற்ற வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினியுடன் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்திருந்தார். அப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரானது குறிப்பிடத்தக்கது.

மும்பை ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினியிடம், விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். வேட்டையன் படப்பிடிப்பு குறித்து கேட்டபோது, 80 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டதாக பதிலளித்தார். அதேபோல், கூலி டைட்டில் டீசர் பற்றியும், அதில் இடம்பெற்ற பாடலுக்காக இளையராஜா காப்பி ரைட்ஸ் நோட்டீஸ் அனுப்பியது குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரஜினி, கூலி டைட்டில் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றார்.

மேலும், கூலி டைட்டில் டீசரில் எழுந்த காப்பி ரைட்ஸ் விவகாரம் இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையேயான பிரச்சினை எனக் கூறிவிட்டு நைஸாக எஸ்கேப் ஆனார். ரஜினி – இளையராஜா இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் ரஜினியின் கூலி டைட்டில் டீசர் விவகாரத்தில் இளையராஜா நடந்துகொண்ட விதம் சர்ச்சையானது. இதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெயரை மட்டுமே இளையராஜா தனது நோட்டீஸில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User