உதயநிதி வியூக வகுப்பாளர் சுனில் கன்கோலு திடீர் விலகல்: காங் உடன் பேச்சுவார்த்தை, தடை போடும் ஜான் ஆரோக்கியசாமி 

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராக இருந்த சுனில் திடீரென விலகி உள்ளார். தமிழக காங்கிரசுக்கு வியூக வகுப்பாளராக செயல்பட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. 

Jun 06, 2026 - 05:29
0 547
உதயநிதி வியூக வகுப்பாளர் சுனில் கன்கோலு திடீர் விலகல்: காங் உடன் பேச்சுவார்த்தை, தடை போடும் ஜான் ஆரோக்கியசாமி 
காங் உடன் பேச்சுவார்த்தை, தடை போடும் ஜான் ஆரோக்கியசாமி 

தி.மு.க., கட்சிக்கு  ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர், 'பென்' நிறுவனம் மூலம் கட்சியின் வியூகங்கள் வகுத்து வந்தார். தேர்தல் உள்பட கட்சி தொடர்பாக அனைத்து பணிகளையும் பென் நிறுவனமே மேற்கொண்டு வந்தது. ஆனால் உதயநிதி பென் நிறுவனத்திற்கு மாற்றாக தனது தனியாக ஒரு வியூக வகுப்பாளரை நியமித்து இருந்தார். 

கர்நாடகாவைச் சேர்ந்த சுனில் கன்கோலுவை, உதயநிதிக்கு வியூக வகுப்பாளராக கடந்த 4 வருடங்களாக செயல்பட்டு வந்தார். தெலுங்கானா, கர்நாடாக சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரசுக்கு சுனில் தேர்தல் வியூக பணிகளை செய்து இருந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு எடப்பாடிப்பாக சுனில் தேர்தல் பணிகள் செய்து கொடுத்தார். 

பென் நிறுவனமும், சுனில் கொடுத்த அறிக்கையும் முரண்பட்டு இருந்து வந்தது. விஜய் மற்றும் தவெக குறித்து பென் நிறுவனம் கொடுத்த அறிக்கை மாறாக சுனில் உதயநிதியிடம் அறிக்கை கொடுத்து இருந்தார். பல தருணங்களில் பென், சுனில் இடையே பனிப்போர் நிலவி வந்தது. திமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என பென் நிறுவனம் அறிக்கை கொடுத்து இருந்தது. ஆனால் தவெக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என சுனில் தரப்பு கூறி வந்தது. 

ஆனால் திமுக தலைமை உதயநிதி சுனிலின் பேச்சை கேட்கவில்லை. மேலும், தொடர் சுற்றுப்பயணம், தடாலடி அரசியல் போன்ற சுனிலின் அறிவுரைகளை, உதயநிதி உதாசீனப்படுத்தினார். இதனால், சுனிலுக்கும், உதயநிதிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்த நிலையில், தற்போது அவரை விட்டு விலகி விட்டார்.

தமிழக காங்கிரசுக்கு வியூக வகுப்பாளறாக செயல்பட சுனில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. இதை தெரிந்து கொண்ட தவெக வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தமிழக காங்கிரசில் நுழைய சுனிலுக்கு தடை போடும் வேலை செய்ய ஆரம்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User