தஞ்சையில் வாஷிங்மெஷின் வெடித்து எரிந்து தீ விபத்து - போலீசார் விசாரணை

மின் கசிவு காரணமாக வாஷிங்மெஷின் வெடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்

Dec 09, 2023 - 14:20
Updated: 3 years ago
0 243
தஞ்சையில் வாஷிங்மெஷின் வெடித்து எரிந்து தீ விபத்து - போலீசார் விசாரணை

தஞ்சாவூரில் வாஷிங்மெஷின் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் வீடு தீக்கிரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் கீழவாசல் கவாஸ்காரத்தெருவை சேர்ந்தவர் சிவகிரிநாதன் இவரது வீட்டின் கீழ் பகுதியில் மாமனார் மாமியார் வசித்து வருகின்றனர்.மாடி வீட்டில் சிவகிரிநாதன் மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகிரிநாதன் மனைவி புவனேஸ்வரி வாஷிங்மெஷினில் துணியை போட்டு சுவிட்ச் போட்டு விட்டு நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்றார். அப்போது சிறிது நேரத்தில் வாஷிங்மெஷின் பயங்கர சத்தத்துடன் வெடித்து எரிய தொடங்கியது.சிவகிரிநாதன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். 

தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாஷிங்மெஷின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.இருப்பினும் வாஷிங்மெஷின் முற்றிலும் எரிந்து சேதமானது.இந்த பயங்கர தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.இது குறித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மின் கசிவு காரணமாக வாஷிங்மெஷின் வெடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User