புதுச்சேரி, தெலங்கானா மக்களின் அன்புக்கு நன்றி...தமிழிசை உருக்கம்

மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த அனைவருக்கும் தமிழிசை நன்றி

Mar 19, 2024 - 15:45
0 172
புதுச்சேரி, தெலங்கானா மக்களின் அன்புக்கு நன்றி...தமிழிசை உருக்கம்

புதுச்சேரி, தெலங்கானா மக்கள் தன் மீது காட்டிய அன்புக்கு நன்றி தெரிவிப்பதாக தமிழிசை சௌந்தராஜன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழிசை சௌந்தராஜன் போட்டியிடுவார் என தகவல் வெளியான நிலையில், அவர் தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்கண்ட் மாநில ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது 'X'தளத்தில், புதுச்சேரி, தெலங்கானா ஆளுநராக இருந்து மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தம் மீது அன்பு, பாசம் காட்டிய புதுச்சேரி, தெலங்கானா மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User