தேர்தலை புறக்கணிக்க போவதாக ஒட்டப்பட்ட போஸ்டர்...ராமநாதபுரத்தில் பரபரப்பு...
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வாழக்கூடிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் தங்களை எஸ்சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டுமென பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் மாவட்டம் முழுவதும் போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
அதில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து 10% இட ஒதுக்கீட்டுடன் தங்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றம் செய்பவர்களுக்கே தங்களது ஆதரவும் எனவும், எந்த அரசியல் கட்சியையும் தாங்கள் ஆதரிக்கப் போவது இல்லை எனவும், எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேறும் வரை வருகின்ற தேர்தல் அனைத்தையும் புறக்கணிக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?
Like
62
Dislike
7
Love
27
Funny
2
Wow
0
Sad
1
Angry
0




Comments (0)