தமிழக வெற்றிக்கழகம்.. தலைவர் ஜோசப் விஜய்.. நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் முறைப்படி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

May 11, 2024 - 18:23
0 528
தமிழக வெற்றிக்கழகம்.. தலைவர் ஜோசப் விஜய்.. நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் முறைப்படி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அத்துடன் கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கட்சியின் பதிவு மற்றும் கட்சி நிர்வாகிகள் குறித்த தகவலை பொது நோட்டீஸாக வெளியிட்டுள்ளனர். அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தகிரா ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.

நிர்வாகிகள் அடங்கிய பட்டியல் முறைப்படி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை பதிவு செய்ய யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் முறைப்படி தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது .

ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும்போது, அந்தக் கட்சியின் பெயரை பொது நோட்டீஸாக வெளியிட்டு, யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

அப்படி யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றால் விண்ணப்பித்தவர்களுக்கு பெயர் ஒதுக்கப்பட்டு, கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படும். ஒரு வேலை யாரேனும் ஆட்சேபனை தெரிவித்தால், அந்தப் பெயரும் கட்சியும் பதிவு செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 1
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User