Taapsee Wedding: 10 வருட காதல்… ரகசியமாக நடந்த திருமணம்… காதலனை கரம் பிடித்த டாப்ஸி!
ஆடுகளம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான டாப்ஸி, தற்போது பான் இந்தியா நடிகையாக கலக்கி வருகிறார். இந்நிலையில், டாப்ஸிக்கு ரகசியமாக திருமணம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோலிவுட், டோலிவுட் தொடங்கி தற்போது பாலிவுட்டில் லீடிங் ஹீரோயினாக வலம் வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் டுங்கி திரைப்படம் வெளியாகியிருந்தது. இதில் ஷாருக்கானுடன் ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்ஸி, அப்போது முதலே “வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா” என ரசிகர்களை ஏங்க வைத்தவர். இப்போது பான் இந்தியா நடிகையாகவும் அதகளம் செய்து வருகிறார்.
டாப்ஸியை இதுவரை சிங்கிள் பீஸ் என நினைத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சிகரமான செய்தி கிடைத்துள்ளது. அதாவது 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த தனது நண்பரை டாப்ஸி திருமணம் செய்துகொண்டாராம். உதய்ப்பூரில் ரகசியமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் டாப்ஸியின் உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். முக்கியமாக இரு தினங்களுக்கு முன்னர், அதாவது மார்ச் 23ம் தேதியே டாப்ஸியின் திருமணம் முடிந்துவிட்டதாம்.
பேட்மிண்டன் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான மத்தியாஸ் போ, இந்தியாவில் நடைபெறும் பேட்மிண்டன் லீக்கில் விளையாட வந்த போது டாப்ஸியுடன் காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்து வந்தனர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்த இந்த டேட்டிங் பந்தம், தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. டாப்ஸி – மத்தியாஸ் திருமணம் சீக்கிய முறைப்படியும் கிறிஸ்துவ முறைப்படியும் நடைபெற்றுள்ளது.

தனது திருமணம் நடைபெற்றதை ரகசியமாக வைத்திருக்க நினைத்த டாப்ஸி, இதுவரை புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. ஆனால், விரைவில் பாலிவுட் உட்பட திரையுலக நட்சத்திரங்களை அழைத்து ட்ரீட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ரிசப்ஷன் நிகழ்ச்சியை நடத்தவும் டாப்ஸி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)