கோயிலில் வைத்து கையெழுத்திட்டு ஓ.பி.எஸ். வேட்புமனு தாக்கல்.. வெற்றி வாய்ப்பு பிரகாசம் என நம்பிக்கை..

Mar 25, 2024 - 15:23
0 155
கோயிலில் வைத்து கையெழுத்திட்டு ஓ.பி.எஸ். வேட்புமனு தாக்கல்.. வெற்றி வாய்ப்பு பிரகாசம் என நம்பிக்கை..

பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருச்சுக்கட்டு செல்வ விநாயகர் கோயிலில் வைத்து தனது வேட்புமனுப் படிவத்தில் கையெழுத்திட்டார். தொடர்ந்து வேட்புமனு ஆவணங்கள் சாமி சிலை முன்பு வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. 

இதையடுத்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி விஷ்ணு சந்திரனிடம் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமநாதபுரம் தொகுதி மக்களவைத் தேர்தலில் தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். சின்னத்தை விட, போட்டியிடுபவரின் அரசியல் அனுபவம், தகுதி போன்றவற்றை பார்த்துத் தான் மக்கள் வாக்களிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். வாளி, பலாப்பழம், திராட்சைப் பழம் ஆகியவற்றில் ஒன்றை சின்னமாக கேட்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User